2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'தனி ஒருவன் ' தயார்

George   / 2015 ஜூலை 07 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஜெயம்' ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படம் 'தனி ஒருவன்'.

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதைத் தொடர்ந்து இப்போது திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

'ஹிப்பொப் தமிழா' ஆதி இசையமைக்கும் இத்திரைப்படத்தின் பாடல்களை இம்மாதம் 15ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளார்கள்.

'தில்லாலங்கடி' திரைப்படத்துக்கு பிறகு 'ஜெயம்' ராஜா - 'ஜெயம்' ரவி இணையும் திரைப்படம் மற்றும் நயன்தாரா - ஜெயம் ரவி முதன் முதலாக இணைந்து நடிக்கும் திரைப்படம் என பல சிறப்புக்களுடன் உருவாகி வரும் 'தனி ஒருவனை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X