2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சிருஷ்டியின் கிளாமர்

George   / 2015 ஜூலை 08 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன் என பல திரைப்படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. தற்போது வில் அம்பு, கத்துக்குட்டி, அச்சமின்றி என சில திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 

தமிழில் அதிக திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் நேரத்தில் மற்ற மொழிகளில் நடிக்க கவனத்தை திருப்பினால் இங்கு நிலையான இடம் கிடைக்காமல் போய்விடும் என்பதால், தற்போதைக்கு தமிழே கதியென்று இறங்கி அடித்து வருகிறார் சிருஷ்டி டாங்கே.

சில நடிகைகளைப்போன்று நான் தனி ஹீரோயினாக நடித்து வரும் நேரத்தில் கேரக்டர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்ற கண்டிசனெல்லாம் போடாமல், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கெஸ்ட் ரோல் என்றாலும் நடித்து அவர்களை நண்பர்களாக்கிக்கொள்கிறார் சிருஷ்டி.

அவரது இந்த அணுசரணையான போக்கு காரணமாகத்தான் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றபோதும், பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் இதுவரை சம்பள விவகாரத்தில் ஓரளவு அடக்கி வாசித்து வந்த சிருஷ்டி டாங்கே, தற்போது திரைப்படத்துக்கு 10 இலட்சம் கேட்கிறார். அதோடு, இந்த சம்பளத்துக்கு நீங்கள் ஓகே என்றால் சற்று கிளாமராகவும் நடிக்க தயார் என்று தனது மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .