2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சமந்தாவின் சாமர்த்தியம்

George   / 2015 ஜூலை 08 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டுவரை சில பிரபல ஹீரோக்களின் செயலை குற்றஞ்சாட்டி சர்ச்சைகளில் சிக்கி வந்தவர்தான் சமந்தா. தற்போது பிழைக்கத் தெரிந்த நடிகையாகிவிட்டார்.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ஒரு திரைப்படத்தின் போஸ்டரில்  ஹீரோயினை மிக மட்டமாக சித்தரித்திருப்பதாக இணையதளத்தில் செய்தி வெளியிட்டார். 

இதனால் மகேஷ்பாபு மட்டுமின்றி அவரது ரசிகர்களும் சமந்தாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்தனர் பின்னர், மகேஷ்பாபுவை சந்தித்து சாதாரணமாக சொன்னதை இவ்வளவு பெரிதாக்கி விட்டீர்களே என்று மன்னிப்பு கேட்டார் சமந்தா.

விளைவு தன்னுடன் சமந்தா ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கும் சிபாரிசு செய்தார் மகேஷ்பாபு. ஆனால் அதன்பிறகு அவர் எந்த ஹீரோக்களையும் விமர்சிக்கவில்லை. அது தனது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்கினார் சமந்தா.

மேலும், தற்போது படப்பிடிப்பு தளங்களில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் விஜய், சூர்யா, தனுஷ் என்று ஒவ்வொரு ஹீரோக்களின் சிறப்பை பற்றி ஒரு ரசிகை போன்று சொல்லி பெருமையடிக்கிறாராம் சமந்தா. 

அதோடு, அவர்கள் ஒவ்வொருவருடனும் நடிக்கும்போதும் ஒவ்வொருவிதமான அனுபவம் எனக்கு கிடைத்தது என்று சொல்லி, அவர்களை புகழ்ந்து தள்ளுவதையே முக்கிய வேலையாக கொண்டு வருகிறாராம். ஆக, பிழைக்கத் தெரிந்த நடிகையாகி விட்டார் சமந்தா.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .