2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கோமாளி நயன்

George   / 2015 ஜூலை 19 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கோமாளி என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில்  கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் சொன்னார்கள்.

இப்போது அவர்களுடன் நயன்தாராவும் நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளாராம். நயன்தாரா இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் நடித்து இல்லை. 

இதற்கு முன் ராவணன திரைப்படத்தில் கூட பிரியாமணி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவைக் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்றும் செய்தி வெளிவந்தது.

இப்போது மணிரத்னம் குழுவினர் நயன்தாராவைச் சந்தித்து கதையைச் சொன்னதாகவும் கதையைக் கேட்டவுடனே திரைப்படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். 

இப்படி திரைப்படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், நயன்தாரா என முக்கியமான நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் திரைப்படத்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மணிரத்னம் திரைப்படம் என்றாலே இந்தியாவே திரும்பிப் பார்க்கும். 

அதோடு இந்த நட்சத்திரங்களும் திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் இந்தப் திரைப்படம் மிகப் பெரிய வசூலை அள்ளவும் வாய்ப்பாக இருக்கும். 

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை விரைவில் மணிரத்னம் வெளியிடுவார் என கூறப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X