George / 2015 ஜூலை 28 , மு.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஒரு காலத்தில் தனி ஹீரோய்ன் கொண்ட கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வந்தவர் த்ரிஷா. ஆனால் பதினோறு ஆண்டுகளாக அப்படி நடித்து அவருக்கு போரடித்து விட்டதோ என்னவோ. இப்போது மல்டி ஸ்டார் கதைகளில் நடிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது என்கிறார்.
இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், 'எனக்கு எப்போதுமே மல்டி ஸ்டார் திரைப்படம்னா ரொம்ப பிடிக்கும். காரணம், ஒவ்வொருத்தரோடு திறமையும்; முழுசாக வெளிப்படும். படக்குழுவில் ஜொலியாக பேசிக்கிட்டாலும், நடிப்புன்னு கமெராவுக்கு முன்னாடி வரும்போது ஒரு போட்டி இருக்கும்.
அந்த வகையில், இப்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள சகலகலா வல்லவன், சுந்தர்.சியின் அரண்மனை திரைப்படங்களில் மல்டி ஸ்டார் கதைகளில் நடித்திருக்கிறேன். இதில் சகலகலா வல்லவன் திரைப்படத்தில் இன்னொரு நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.
'எனக்கு ரொம்ப அழகான ரோல். கடைசியாக தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் கொமடியாக நடித்தேன். அதன்பிறகு இந்த திரைப்படத்தில் இதுவரை நான் நடித்திராத கொமடி வேடம். ஜெயம்ரவியுடன் எனக்கு இது 3ஆவது திரைப்படம். இதுவரை அவருடன் நான் நடித்த சம்திங் சம்திங் திரைப்படத்தைப்பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள். ஆனால் இனிமேல் இந்த சகலகலா வல்லவன் திரைப்படத்தைப் பற்றி பேசுவார்கள்' என்கிறார் த்ரிஷா.
8 minute ago
12 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
16 minute ago