2025 மே 17, சனிக்கிழமை

சண்டைக்கோழியில் நான் இல்லை

George   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டைக்கோழி  திரைப்படத்தில் விஷாலுடன் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. நான் வேறு எந்த தமிழ்த் திரைப்படத்திலும் நடிக்கவும் இல்லை என்று நடிகை அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார். 

பாயும் புலி திரைப்படத்தை தொடர்ந்து, லிங்குசாமியில் இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடித்து 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சண்டைக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்கபோவதாகவும் அவருக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்கப்போவதாகவும் செய்தி வெளியாகியது.

எனினும் இதனை மறுத்த அக்ஷரா ஹாசன், விஷால் ஜோடி யார் என்பது தெரியவில்லை, விஷால் ஜோடியாக நான் நடிக்கப்போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று கூறியதுடன் இது தொடர்பாக யாரும் தன்னை அணுகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்தியில் பால்கி இயக்கிய ஷமிதாப் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது. இதனையடுத்து பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரை அணுகினர்.

எனினும் அக்ஷரா எந்த திரைப்படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.இந்நிலையில், லிங்குசாமி-விஷால் கூட்டணியில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

சண்டைக்கோழி முதல் பாகத்தில் நடித்த விஷால்தான் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அப்போ மீரா ஜாஸ்மின் வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்களோ? லிங்குசாமிதான் இதற்கு பதில் சொல்லவேண்டும். பேசாமல் மீரா ஜாஸ்மின் நடித்தாலே நன்றாகத்தான் இருக்கும் ஹீரோ ஒத்துக்கொள்ள வேண்டுமே?

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .