2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கஜோலின் சேவை பொலிவூட்டுக்கு தேவை

George   / 2015 ஓகஸ்ட் 20 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தில்வாலே திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, தனது சம்பளத்தை அதிகரிக்க கஜோல் திட்டமிட்டுள்ளார்.

பொலிவூட் திரையுலக ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை கஜோல், நீண்ட இடைவெளிக்கு பிறகு, தில்வாலே திரைப்படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

இந்த திரைப்படத்தில், ஷாரூக் கானுக்கு ஜோடியாக நடித்துள்ள கஜோலுக்கு 5 கோடி இந்திய ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

கரீனா கபூர், கத்ரீனா கைப் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கும் இதேஅளவிலேயே, சம்பளம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தில்வாலே திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, தனது சம்பளத்தை உயர்த்த கஜோல் திட்டமிட்டுள்ளார்.

பொலிவூட் திரையுலகில், தற்போது கஜோலின் சேவை தேவை என்பதால், சம்பள உயர்வு, தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்காது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X