Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 மார்ச் 15 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
1991ஆம் ஆண்டு வெளியான மன்னன் திரைப்படத்துக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குரலில் பாடலொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கோச்சடையான திரைப்படத்துக்காக இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சுமார் 21 வருடங்களின் பின்னர் இந்தப் பாடலை பாடியுள்ளார் சூப்பர் ஸ்டார்.
மன்னன் திரைப்படத்தில் 'அடிக்குது குளிரு...' என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடினார் ரஜினி. அந்தப் பாடலுக்கு இசை இளையராஜா. இத்தனை ஆண்டுகளில் பல முறை அவரை பாடுமாறு பல இசையமைப்பாளர்கள் வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்தார் ரஜினி, இப்போது தனது அடுத்த படமான கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சௌந்தர்யா ஆகியோர் உடன் இருந்துள்ளனர். மிக மகிழ்ச்சியுடன் இந்தப் பாடலை அவர் பாடிக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Hassan Friday, 16 March 2012 04:29 PM
தலைவா, இதுவும் கொலை வெறி பாடலயும் தாண்டி ஹிட் ஆக வாழ்த்துக்கள், மருமகன் தனுஸ் பாடி ஹிட் ஆனது பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Reply : 0 0
ibnuaboo Saturday, 17 March 2012 12:41 AM
நீங்களும் மருமகனால் பாதிக்கப்பட்டீர்களா? இந்த வயசில் ஏனிந்த இசை வெறி?
Reply : 0 0
irshan Thursday, 22 March 2012 07:58 PM
நல்ல விசயம் ரஜனி தாத்தா.
Reply : 0 0
asram Saturday, 24 March 2012 06:51 PM
ஹாய் மை டியர் ரஜனி, பாடல் ஹிட் ஆக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
Reply : 0 0
huthai Sunday, 25 March 2012 02:13 AM
நல்ல முடிவுதான் ரஹுமானின் ரின் இசையும் சேர்த்து கலக்கும்
Reply : 0 0
roshan Monday, 02 April 2012 09:09 PM
தனுஷ் போல வேண்டாம், அத விட பெரிசா உன்னை புகழனும் தலைவா. அப்பிடி ஒரு பாடல் நீ பாடனும் தலைவா. என் வாழ்த்துக்கள். 'முல்லைப் பூங்கொடி வெட்கம் ஏனடி' என்ன வரி தலைவா!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago