2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

37 வயது நடிகை மரணம்

S.Renuka   / 2026 பெப்ரவரி 19 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரை மற்றும் திரையுலகில் பிரபலமான 37 வயதான நடிகை ராஷ்மி லீலா, கடந்த சில ஆண்டுகளாகப் போராடி வந்த நுரையீரல் நோயின் காரணமாகச் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த நோயின் தீவிரம் காரணமாக அவரது இரண்டு நுரையீரல்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே அவரைக் காப்பாற்ற ஒரே வழியாக இருந்தது.

இதற்கான சிகிச்சைச் செலவு சுமார் 19 இலட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டதால், போதிய பொருளாதார வசதி இல்லாத ராஷ்மி லீலா, சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொதுமக்களிடம் உருக்கமாக நிதியுதவி கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுத் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய உடல்நிலை ஒத்துழைக்காததால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இத்தகவலை அவரது கணவரும், பிரபல எழுத்தாளருமான சரக்கி மஞ்சு உறுதிப்படுத்தியுள்ளார்.

ராஷ்மி லீலா 'பாப்பா பண்டு', 'தெலுங்கு ஜானகி', 'காவ்யாஞ்சலி' உள்ளிட்ட ஏராளமான கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களிலும், 'பிராண', 'கிராம தேவதை' போன்ற திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர்.

திறமையான ஒரு கன்னட நடிகையின் இந்தப் பேரிழப்பு கன்னடத் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .