Freelancer / 2022 மே 31 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் அறிவிக்கப்பட்ட 52ஆவது கேரளா அரசு விருதுகளில் பூதகாலம் என்கிற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை ரேவதிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் சதாசிவம் என்பவர் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், கணவன் இல்லாமல் ஒற்றை ஆளாக தனது மகனை வளர்க்கும் தாயாக நடித்திருந்தார் ரேவதி.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ரேவதி பெறும் முதல் கேரள அரசு விருது இதுவாகும்.
கடந்த 1983-ல் மலையாளத்தில் 'கட்டத்தே கூடு' என்கிற திரைப்படத்தில் அறிமுகமான அதே சமயத்தில்தான், தமிழில் மண்வாசனை என்கிற திரைப்படத்திலும் அறிமுகமானார் ரேவதி.
இத்தனை வருட திரையுலக பயணத்தில் மூன்று தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ள ரேவதிக்கு தனது சிறந்த நடிப்புக்காக முதல்முறையாக தனது சொந்த ஊரான கேரளாவில், கேரள அரசு விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
30 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago