2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

50 ஏக்கரில் திரைப்பட நகரம்

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் எஸ்.ஆர்.ஏ.எம் மற்றும் எம்.ஆர்.ஏ.எம் குழுமம், பிரடிகிம் பிக்சர்ஸ் இணைந்து தென்னிந்தியாவில் மெகா திரைப்பட நகரத்தை அமைக்க உள்ளனர். மேலும் இந்த நிறுவனங்கள் இணைந்து தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து படங்களையும் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.ஏ.எம் மற்றும் எம்.ஆர்.ஏ.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். சைலேஷ் எல். ஹீரானந்தானி கூறியது.

50 ஏக்கர் பரப்பளவில், திரைப்பட நகரம் தென்னிந்தியாவில் தொடங்க உள்ளோம். இது அமைய உள்ள இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

உலகத்தரம் வாய்ந்த ஸ்டுடியோக்கள், மேம்பட்ட விஎஃப்எக்ஸ் ஸ்டுடியோ மற்றும் உயர்தர டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோக்கள். சொகுசு ப்ரீவியூ தியேட்டர்கள் – டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய, ஐந்து திரையரங்குகள். ஆடம்பரமான தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்ஸ். பத்து உயர்நிலை ஓய்வு விடுதிகள்,பிரபலங்களுக்கான தங்குமிடங்கள், படக்குழுக்களுக்கான 100 அறை வசதிகளுடன். பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வு இடங்கள், கஃபே, பப், மாநாட்டு அரங்குகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கான அதிநவீன இடம் உள்ளிட்டவை இடம்பெறும் என்றார்.பிரடிகிம் பிக்சர்ஸ் தலைவர் அர்விந்த் தர்மராஜ் .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X