R.Tharaniya / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன், ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன், கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான "நன்றி" என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு "சேவகன்" என்ற படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கியும் இருந்தார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு "ஜெய்ஹிந்த்", "கர்ணா", "தாயின் மணிக்கொடி", "வேதம்", "ஏழுமலை" உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். கடைசியாக அவர் 2018 ஆம் ஆண்டு "சொல்லிவிடவா" என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இப்போது, ஏழு வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். "சீதா பயணம்" என்ற தலைப்பில் உருவாகும் படத்தில், அவரது நெருங்கிய உறவினரான துருவ் சார்ஜா ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இந்த படம் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது.



1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago