2025 மே 20, செவ்வாய்க்கிழமை

7 வயது சிறுமியுடன் ஹொலிவூட்டில் ஜோடி சேரும் கமல்...

Menaka Mookandi   / 2012 ஜூலை 15 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் உண்மையிலேயே உலக நாயகனான ஹொலிவூட்டில் கலமிறங்குகிறார். அதுவும் நடிகராக மாத்திரமல்ல இயக்குநராகவும் கூட. இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும்.

முதன் முறையாக ஹொலிவூட்டில் காலடி எடுத்து வைக்கும் கமல், இந்தியப் பின்னணியுடன் கூடிய கதையிலேயே நடிக்கவிருக்கிறார். பிரபல ஹொலிவூட் தயாரிப்பாளர் பேரி ஒஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார். தி லோர்ட் ஒப் ரிங்ஸ் உள்ளிட்ட பல புகழ் பெற்ற திரைப்படங்களை உருவாக்கியவர் ஒஸ்போர்ன் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் எத்தனையோ ஜோடிகளைப் பார்த்துவிட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப் போகிறார். அதாவது, ஏழு வயது சிறுமியுடன் ஜோடி சேர்வதே கமலின் இந்த வித்தியாசமான அனுவமாக இருக்கப்போகின்றது.

தானே இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுடன் மேற்படி 7 வயது சிறுமி திரைப்படம் முழுவதும் கூடவே வரும் வகையில் கதை அமையப்பெற்றுள்ளதாம். மொத்தத்தில் கமல்ஹாசனுக்கு நிகரான கதாபாத்திரம் இச்சிறுமிக்கும் வழங்கப்படவுள்ளதாம்.

கதைப்படி இந்தச் சிறுமி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம்.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், 'பார்க்க கியூட்டாக இருந்தால் மட்டும் போதாது. நன்கு நடிக்கவும் தெரிய வேண்டும். அப்படியான சிறுமியைத்தான் தேடி வருகிறோம். நான் கூட 7 வயதில்தான் நடிக்க வந்தேன். எனவே அந்த வயதில் ஒரு குழந்தை எப்படி இருக்கும், எப்படி உணரும் என்பது எனக்குத் தெரியும். எனவே 7 வயதுக் குழந்தையுடன் இணைந்து நடிப்பது என்பதை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

நான் சொன்ன கதை பேரி ஒஸ்போர்னுக்கு உடனே பிடித்துப் போய் விட்டது. உடனே ஒப்புக்கொண்டு விட்டார். அத்துடன், கதைப்படி சிறுமியொருவர் என்னுடன் கதை முழுவதும் வரும் விடயம் அவரை மேலும் ஆர்வத்துக்குள்ளாக்கியுள்ளது' என்று கூறியுள்ளார் கமல்.


You May Also Like

  Comments - 0

  • siraj Wednesday, 18 July 2012 06:24 AM

    உலக நாயகன் உலக நாயகன் தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X