2025 மே 19, திங்கட்கிழமை

8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன்

Menaka Mookandi   / 2014 மார்ச் 17 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஸ்வரூபம் 2 திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா நடிக்கின்றனர்.

கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமல் ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

உத்தம வில்லன் திரைப்படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிஇஷயில் உத்தம வில்லன் திரைப்படத்தின் கதையை திரைப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூறறாண்டின் சினிமா நட்சத்திரமாக மற்றறொரு பாத்திரத்திலும் கமல் நடித்து வருகிறார்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குநர் விஸ்வநாத்தும் நடிக்கின்றனர்.

8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ஆம் நூற்றாண்டுக் கமலின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

ணித்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியாக நாசரும், ஜோசப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராணிம், ஜெயராமின் வளர்ப்பு மகளாக ணிக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனன் நடிக்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார் என்று அந்த செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.


பிள்ளைகள் பற்றிய கவலையில் நட்சத்திர தம்பதி


கோலிவூட்டைச் சேர்ந்த நட்சத்திர தம்பதியான பாக்கியராஜ் - பூர்ணிமா ஆகியோர், தங்கள் பிள்ளைகளை நினைத்து கவலைப்படுகிறார்களாம்.

கோலிவூட்டைச் சேர்ந்த இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ், ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தார். தற்போதும் தமிழ், மலையாளம் என்று பல மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவரது மனைவி பூர்ணிமா, பல ஆண்டுகள் கழித்து அண்மையில் தான் கோலிவுட்டில் ரீ என்ட்ரி ஆனார். ஒரு காலத்தில் அவரும் பெரிய ஹீரோயினாக இருந்தவர் தான்.

அவர்களின் மகளின் மகள் சரண்யாவும் மகன் சாந்தனுவும் பெற்றண்க்ரைப் போன்று சினிமாவில் ஜொலிக்கவில்லை. மகள் தான் அப்படி ஆயிற்று மகனாவது பெரிய ஆளாக வருவான் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் மகனுக்கு கோலிவுட்டில் பெரிதாக மவுசு இல்லை. இதனால் நட்சத்திர தம்பதி தங்கள் பிள்ளைகளை நினைத்து வருத்தப்படுகிறார்களாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X