George / 2017 ஜனவரி 24 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்யா நடித்த 'ஒரு கல்லூரியின் கதை' மற்றும் 'மாத்தி யோசி', அழகன் அழகி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமி, ஒருசில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.
ஆனால், நந்தா இயக்கிய முதல் திரைப்படம் அஜீத் நடித்த 'மகா' திரைப்படம் என்றும், அந்த திரைப்படம் எதிர்பாராத காரணத்தால் நின்றுபோனதாகவும் அண்மையில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அஜீத் முதன்முதலில் பொலிஸாக நடித்த 'மகா' திரைப்படத்தை தான் இயக்கியதாகவும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜீத் காயம் அடைந்ததால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாகவும் நந்தா கூறியுள்ளார்.
பின்னர், மீண்டும் அஜீத் குணமாகி படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில் அவருக்கும், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 'மகா' திரைப்படம் 12 நாட்கள் படப்பிடிப்புடன் நின்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஜீவா, பாலகுமாரன், வைரமுத்து, ஹரிஸ் ஜெயராஜ், கனல் கண்ணன், தோட்டா தரணி என பெரிய கூட்டணி கிடைத்தும் திரைப்படம் தொடராமல் போனதால் தனது கனவு கலைந்துவிட்டதாகவும், ஒருவேளை அந்த திரைப்படம் தன்னுடைய முதல் திரைப்படமாக இருந்திருந்தால் தனது திரையுலக வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் மனவலியுடன் பதிவு செய்துள்ளார்.
11 minute ago
17 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
19 minute ago