Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக செய்திவெளியாகியுள்ளது.
அஜித்தின் 59ஆவது படமான “நேர்கொண்ட பார்வை” படம் வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி வெளியாக இருக்கிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அஜித் மாஸ், மசாலாகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப்படத்தில் நடிக்கிறார். இதனால் இந்த திரைப்படத்துக்கு அஜித் இரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுவான சினிமா இரசிகர்களுக்கு இடையேயும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் இந்த திரைப்படத்தை இயக்கிய ஹெச் வினோத்தே இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கான பூஜை ஓகஸ்ட் மாத இறுதியில் போடப்பட இருக்கிறது. அத்திரைப்படத்துக்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.அர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் கடைசியாக அஜித் நடித்த, “வரலாறு” படத்துக்கு ரஹ்மான் 13ஆண்டுகளுக்கு முன்னர் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .