2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அஜித்தின் துணிவு பொங்கல் அன்று ரிலீஸ்

Editorial   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்தின் 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என நடிகர் ஆர்.கே.சுரேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதையடுத்து நெடிசன்களிடையே சலசலப்பு நிழவி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் 'துணிவு'. மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

போனிகபூர் தயாரிக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் பேங்காங்க் பறந்துள்ளார். முன்னதாக 'துணிவு' தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்னும் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'துணிவு திரைப்படம் 2023-ம் ஆண்டு பொங்கல் அன்று பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது' எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு   நடக்கிறது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு முன்பே உறுதி செய்துள்ளது.

அஜித்தின் 'துணிவு' திரைப்படமும், விஜய்யின் 'வாரிசு' படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷின் பதிவு அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால், ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .