J.A. George / 2023 மே 09 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இத் திரைப்படத்துக்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதுடன், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி படப்பிடிப்பு வருகிற மே 22ம் திகதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், அஜித் நேபாள் மற்றும் பூட்டான் சுற்றுலாவை முடித்த பிறகு இதில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை 70 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 minute ago
15 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
41 minute ago