2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அஞ்சலியின் விளக்கம்

J.A. George   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை அஞ்சலி தனக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்தது குறித்து இணையத்தில் பரவி வரும் தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலிக்கு தொடர்ந்து சரியான திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

தற்போது வெற்றிமாறன், கௌதம்மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள பாவ கதைகள் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் புதுமுக நடிகைகளின் வருகையால்தான் நடிகை அஞ்சலிக்கு திரைப்பட வாய்ப்பு குறைந்ததாக இணையங்களில் தகவல்கள் பரவி வந்த தகவலை அஞ்சலி மறுத்துள்ளார்.

“புதுமுக நடிகைகளின் வருகையால்,  நடிகைகளுக்குள்  நடக்கும் போட்டியால் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்று கூறுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதே கிடையாது. 

யாருடனும் சண்டை போட்டதும் கிடையாது. அனைத்து நடிகைகளுடனும் எனக்கு நல்ல உறவு உள்ளது. அவர்கள் படங்களில் நன்றாக நடித்து இருந்தால் அவர்களுக்கு நேராகவோ அல்லது அலைபேசியிலோ எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்” என அஞ்சலி கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X