R.Tharaniya / 2025 ஜூன் 17 , மு.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சூர்யா மற்றும் சமந்தா நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், 'அஞ்சான்' படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கியவர்கள், படத்தை மறுபடியும் எடிட் செய்து ரிலீஸ் செய்தனர். அந்த பதிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.
இதையடுத்து, அதேபோல் தமிழிலும் 'அஞ்சான்' திரைப்படத்தை ரீ-எடிட் செய்து வெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 'அஞ்சான்' திரைப்படம் மறுபடியும் சிறப்பாக எடிட் செய்யப்பட்டு, மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ-ரிலீஸ் ஆகும் 'அஞ்சான்' திரைப்படம், இந்த முறை ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago