Kogilavani / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில், முதல் ரவுண்டில் சில திரைப்படங்களில் நடித்துத் தோற்றுப்போன ரகுல் பிரீத் சிங், பின்னர் தெலுங்குக்குச் சென்று மார்க்கெட்டைப் பிடித்து விட்டார். அவர் நடித்த திரைப்படங்கள் ஹிட்டடித்ததையடுத்து, இப்போது, அங்கு முன்வரிசை நடிகையாகி விட்டார்.
இதையடுத்து, தமிழில் ரகுல் பிரீத் சிங்கின் மார்க்கெட் எகிறிவிடும் என்பதால், சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் நடிக்கவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
முக்கியமாக, தெலுங்கில் சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால், தெலுங்கில் பிசியாக இருக்கும் ஒரு நடிகையை, அவருக்கு ஜோடி சேர்த்தால் திரைப்படத்தின் தெலுங்கு வியாபாரத்துக்குப் பயனாக இருக்கும் என்று, ரகுல் பிரீத் சிங்கிடம் பேசி வந்தவர்கள். இப்போது ஒப்பந்தம் செய்துவிட்டனர்.
16 minute ago
29 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
41 minute ago