2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அடுத்தது அஜித் படம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் நடித்த ’சச்சின்’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ ரிலீஸ் ஆன நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விழாவில் கலந்து கொண்ட கலைப்புலி எஸ். தாணு, 2005 ஆம் ஆண்டு 200 திரையரங்குகளில் வெளியான ’சச்சின்’ படம் தற்போது 355 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அத்துன், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இலங்கை, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ’சச்சின்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ’சச்சின்’ வெளியாகும் போது கிடைத்த இலாபத்தை விட தற்போது பத்து மடங்கு இலாபம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘சச்சின்’ படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவான ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை ரீ ரிலீஸ் செய்ய போவதாகவும், படத்தின் இயக்குநரிடம்  அது குறித்து பேசியதுடன், அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

அதற்கடுத்ததாக சூர்யா நடித்த ’காக்க காக்க’ திரைப்படத்தை ரீ ரிலீஸ் பணியை தொடங்க உள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு ’தெறி’ மற்றும் ’கபாலி’ ஆகிய  படங்களை  ரீ ரிலீஸ் செய்யும் திட்டமும் உள்ளது என்று எஸ். தாணு குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X