Freelancer / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நயன்தாரா நடிப்பில், உருவான ’ஜவான்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.
‘ராஜா ராணி’ ’தெறி’ ’மெர்சல்’ ’பிகில்’ மற்றும் ’ஜவான்’ என ஐந்து வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இதுவரை தோல்வியே காணாத அவர் கமர்சியலாக வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ’ஜவான்’ திரைப்படத்தை முடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் மூன்று மாதம் முழுமையாக ஓய்வு எடுக்கப் போவதாக அட்லி கூறியுள்ளார்.
இந்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், அட்லி ஓய்வுக்கு பின் சென்னை திரும்பியவுடன் இந்த படத்தின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
8 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Mar 2026