2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அது வெறும் வதந்தி தான்.. முற்றுப்புள்ளி வைத்த லொஸ்லியா

J.A. George   / 2020 நவம்பர் 04 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். 

அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது 'பிரெண்ட்ஷிப்' என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், நடிகை லொஸ்லியாவுக்கும் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக ங்களில் தகவல் பரவி வந்தது. 

அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள லொஸ்லியா, "இப்போதைக்கு திருமண என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் வதந்தி தான்" எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X