Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 மே 03 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளம் நடிகரான விஜய்தேவரகொண்டா நோட்டா, டியர் காம்ரேட், அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் நடிகை ராஷ்மிகாவை காதலிப்பதாக கிசு கிசு வெளியானது. அதை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் தனது திருமணம், காதலி பற்றி விஜயதேவரகொண்டா கருத்து வெளியிட்டிருகின்றார்.
அவர் கூறும்போது, 'நான் யாருக்கும் பதில் சொல்லாமல் சொந்தமாக எனது வாழ்க்கையில் முடிவு எடுக்கும் நிலைக்கு என் தகுதியை வளர்க்க வேண்டும்.
அந்த நிலைக்கு இன்னும் நான் வரவில்லை. எனது திருமணம் மற்றும் வரப்போகும் மனைவி பற்றி கூறவேண்டுமானால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்த எனக்கு இன்னும் பக்குவம் தேவைப்படுகிறது.
எனக்கான காதலியை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் திருமணம் என்பது பத்தோடு பதினொன்று கிடையாது. திருமணம் செய்பவருக்குப் பொறுப்பு மிக முக்கியம்.
வாழ்க்கை துணைவியாக வருபவரை மதிக்க வேண்டும். அதற்கு ஆயத்தமான பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கான கால நேரத்துக்கு என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago