Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
George / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் இசை சேவை வழங்கி வரும் இசை நிறுவனம் 'அப்பிள் மியூசிக்'. இந்நிறுவனத்தின் இந்தியாவின் விளம்பர அம்பாசிடராக இளம் இசைப்புயல் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ''அப்பிள் மியூசிக் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நான் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
அப்பிள் மியூசிக் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனிருத்துக்கு கோலிவுட் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள், தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
'அப்பிள்' இசை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025