Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
George / 2017 மே 31 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி நடிகை அனுஷ்கா தற்போது “பாக்மதி” என்றத் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, பொள்ளாச்சி அருகே அண்மையில் நடந்தது.
படப்பிடிப்பின்போது அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை பொலிஸார் சோதனை செய்தபோது, முறையான ஆவணங்கள் அந்த கேரவனுக்கு இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அனுஷ்கா பயன்படுத்திய கேரவனை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
ஜி.அசோக் இயக்கி வரும் “பாக்மதி” திரைப்படத்தில் அனுஷ்காவுடன் உன்னி முகுந்தன், ஆதி பின்செட்டி, ஆஷா சரத், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். எஸ்.தமன் இசையமைக்கும் இந்தத் திரைப்படம், ஓகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
6 hours ago
6 hours ago