Editorial / 2020 மே 07 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகுபலி வெற்றியை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி RRR என்றத் திரைப்படம் உருவாகி வருகின்றது.
ராம்சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்து வரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தில் ஆலியா பட்டை தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தை ராஜமௌலி பகிர்ந்துள்ளார்.
இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே போட்டி போடும் நடிகை ஒருவர் தேவைப்பட்டார் என்றும் இது முக்கோண காதல் கதை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த கதாபாத்திரம் மிகவும் அப்பாவியானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும் என்றும் அதற்கு பொருத்தமானவர் ஆலியா பட் என்றும் ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago