2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அமலா - விஜய் நிரந்தர பிரிவுக்கு நாள் குறிப்பு

George   / 2017 பெப்ரவரி 19 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை அமலா போல் - இயக்குநர் விஜய், ஆகிய இருவரும் விவாகரத்து கோரிய மனு மீதான தீர்ப்பை, எதிர்வரும் 21ஆம் திகதி வழங்குவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலா​போல், “மைனா”, “தலைவா” உள்ளிட்ட, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், இயக்குநர் விஜய்க்கும், 2014ஆம் ஆண்டு  ஜூனில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின், சினிமாவில் அமலாபால் நடிப்பதை, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என, கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சுமுகமாக பிரிந்து விடுவது என, முடிவெடுத்தனர். 2016 ஓகஸ்ட்டில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் ஆஜராகி, பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

ஆறு மாதங்களுக்கு பின், இவ்வழக்கு, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பூங்குழலி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரும் நேரில் ஆஜராகி, சுமுகமாக பிரிவதாக, மனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, விவாகரத்து வழக்கு உத்தரவை, 21ஆம் திகதி வழங்குவதாக, நீதிபதி பூங்குழலி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X