2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அமலாபாலின் பாய்ச்சல்

J.A. George   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை அமலாபால் தமிழில் “அதோ அந்த பறவை போல” திரைப்படத்துக்கு பின்னர், கடாவர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு இணைய தொடரில் நடிக்கிறார்.

கன்னடத்தில் “யூ டர்ன்” திரைப்படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான குடி யெடமைதே என்ற வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

த்ரில்லராக உருவாகும் இந்த தொடர் 8 பகுதிகளை கொண்டது. அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். ஒரு பொலிஸ் அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை இது.

அடுத்து நந்தினி ரெட்டி இயக்கும் தொடரிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படங்கள், தொடர்கள் தவிர ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் விஸ்வேஷ் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் பொலிவுட்டில் அமலாபால் அறிமுகமாகவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X