2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

அயலானுடன் மோதும் லால் சலாம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஸ்ணு விஷால் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகியுள்ளது. 

இது குறித்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. 

இப்படத்தில் ரஜினி காந்த் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருக்கும் நிலையில், வெளியாகும் அனைத்து போஸ்டர்களும் அவரை முதன்மை படுத்தியே வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் இந்த போஸ்ட்டர் வெளியாகி சிலமணி நேரத்திலேயே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் வெளியீடு என குறிப்பிட்டு அப்படத்தின் போஸ்டரும் வெளியாகியது.

அயலானின் டீசர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது ஒக்டோபர் 6 ஆம் திகதி இப்படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான் படத்தை "இன்று நேற்று நாளை" என்னும் சிறந்த படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் A R ரகுமான் இசையமைக்கிறார் 

இந்த இரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அதிக வசூலை குவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .