Editorial / 2018 மார்ச் 12 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய்யின் 62ஆவது படம், ஜெய்யுடன் நீயா - 2, சக்தி உட்பட 10 படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி, சமீபத்தில், தன் பிறந்தநாளுடன் சர்வதேச மகளிர் தினத்தையும் கொண்டாடினார்.
இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“அரசியல் என்ற வார்த்தை, கெட்ட வார்த்தையா? யாரையும் தோற்கடிக்க, அரசியலுக்கு வர வேண்டாம். நடிகர்கள் மட்டுமல்ல, சமுதாயத்துக்கு நல்லது செய்வோர் யாரானாலும், அரசியலுக்கு வரலாம். சினிமாவில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். சினிமாவில் கிடைத்த பிரபலம் என்ற பலத்தை, நல்ல விடயத்துக்குப் பயன்படுத்துவது தவறில்லை.
இப்போதைக்கு இல்லை என்றாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. அப்போது, பெண்களுக்கான நல்ல விஷயங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். ரஜினி, கமல் மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஊரில் உள்ள அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025