2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அரபிக் குத்தில் சமந்தா செம ஆட்டம்

Editorial   / 2022 பெப்ரவரி 18 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை, 
 
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
 
பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் அரபிக் குத்து என்ற பாடல் கடந்த காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இணைந்து பாடியிருந்தனர். 
 
இந்த நிலையில் தற்போது 'அரபிக் குத்து' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .