2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’அறம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் ஆர்யா

Editorial   / 2018 ஜூலை 09 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா பிரதான பாத்திரமேற்று நடித்த ‘அறம்’படத்தை இயக்கியவர் கோபி நயினார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கப் போராடுவதுதான் இந்தப் படத்தின் கதை.

சமூகக் கருத்துகள் நிறைந்த இந்தப் படத்தை, மக்கள் கொண்டாடினர். நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில், முக்கிய படமாகவும் இது அமைந்தது.

எனவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது என்று தகவல் பரவியது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட கோபி நயினார்,   ‘இப்போதைக்கு ‘அறம் 2’ கிடையாது என்றும், ‘அறம்’ போலவே சமூகக் கருத்துகள் நிறைந்த படத்தை இயக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் கோபி நயினார்.

அவருடைய படத்தில் நாயகான நடிப்பது, ஆர்யா. வடசென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்தக் கதையில், குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் ஆர்யா. இந்தப் படத்தை ரவீந்திரன் தயாரிக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X