2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அறிவழகனின் அடுத்த டாக்கட்

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில், லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

சங்கர் தயாரித்த ‘ஈரம்’ திரைப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் அறிவழகன். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து, சமீபத்தில் ‘குற்றம் 23’ திரைப்படத்தை இயக்கினார். இதில், அருண் விஜய் நாயகனாகவும் மகிமா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு  மற்றும் அதிக வசூலை வாங்கிக் கொடுத்தது.

இவர், அடுத்ததாக, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை இயக்கவிருக்கின்றார். இதில் நாயகியாக, நயன்தாரா நடிக்கவுள்ளார்.  இதில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வு, தற்போது நடைபெற்று வருகிறது. நயன்தாரா நடிப்பில்,  தற்போது ‘அறம்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’, டிசெம்பர் மாதம் வெளியாகவுள்து. ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய திரைப்டங்களிலும் நடித்து வருகின்றார்.

அறிவழகன் இயக்கத்தில், நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை, எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X