2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆண்ட்ரியா மீது நயன் ரசிகர்கள் கோபம்

J.A. George   / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மாஸ்டர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஆண்ட்ரியா அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நயன்தாரா குறித்து கூறிய கருத்து வெளியிட்டார்.

அதன்போது, ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்ததால் தான் நயன்தாராவின் வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று ஆண்ட்ரியா தெரிவித்த கருத்து நயன்தாரா ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.

ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த பல நடிகைகள் தற்போது திரை உலகை விட்டு காணாமல் போயுள்ள நிலையில் நயன்தாராவின் வெற்றிக்கு இது ஒன்றை மட்டுமே காரணமாக ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளது தவறு என்று நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் ஆண்ட்ரியாவும் கமல், அஜித், விஜய், விஷால், சரத்குமார், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X