Freelancer / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

'கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" பாடலின் மூலம், பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த மாளவிகா, இப்போது ஆளே மாறிப்போய் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றார்.
கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'உன்னைத்தேடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா, அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழடைந்தார். திரைத்துறையில் மாளவிகா அறிமுகமாகும் போது இவருக்கு வயது வெறும் 19 தானாம்.

வசீகரமான தோற்றம், கவர்ந்திழுக்கும் சிரிப்பு, அழகிய முகம் என 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த மாளவிகா, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் தனது அசத்தலான நடிப்பினை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர். தமிழில் உன்னைத்தேடி திரைப்படத்தைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றி கொடி கட்டு, சீனு, திருட்டு பயலே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்து அசத்திய மாளவிகா, சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் வரும் 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" பாடலில் குத்தாட்டம் போட்டு இரசிக்க வைத்தார்.
திரையுலகில் கனவுக்கன்னியாக வலம் வந்த மாளவிகா கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் மாளவிகா. அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில், கொஞ்சம் எடை அதிகரித்து, ஆளே மாறிப்போய் காட்சித்தருகின்றார். இதைப்பார்த்த இரசிகர்கள், 'மாளவிகா எடை அதிகரித்தாலும் இன்னும் அதே அழகுடன் தான் மிளிர்கின்றீர்கள்" என்று கூறிவருகின்றனர். 
7 minute ago
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
2 hours ago