Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 26 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை வனிதா விஜயகுமார் தான் எழுதி, இயக்கி, கதாநாயகியாக நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்பட பிரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய மகள் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தன்னுடைய மகள் ஜோவிகா எந்த உடை உடுத்தினாலும் அது விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் அதற்கு ஜோதிகாவை எடுத்துக்காட்டாக சொல்லி வனிதா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நடிகை வனிதாவுக்கு அறிமுகமே தேவை இல்லை, சோசியல் மீடியாவில் எப்போதும் வைரல் ஆகி கொண்டிருப்பவர் தான். இப்போதுள்ள தலைமுறைகளுக்கு இவரை நடிகையாக தெரிவதை விடவும் பிக்பாஸ் பிரபலமாகத்தான் பலருக்கும் தெரியும். அவர் ஆரம்பத்தில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானது நடிகர் விஜய்க்கு ஜோடியாக தான். அதற்கு பிறகு நடிகர் ராஜ்கிரண் உட்பட ஒரு சில நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் 18 வயதிலேயே திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதற்கு பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தந்தையோடு ஏற்பட்ட பிரச்சனையின் மூலம் செய்தி சேனல்களில் இவருடைய பெயர் தான் அதிகமாக உச்சரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிஸியாக மாறிவிட்டார். இப்போது தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ரிவ்யூ செய்து வருகிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய மகள் தயாரிப்பில் தானே கதையை எழுதி, இயக்கி, கதாநாயகியாக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தையும் முடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ப்ரமோஷனில் வனிதா கலந்து கொண்ட போது தன்னுடைய மகள் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருந்தார். அதில் என்னுடைய மகள் ஜோவிகா மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது பாவாடை தாவணி போட்டு இருந்தாங்க, அப்போது கூட சிலர் நீங்க ட்ரெடிஷனல் உடை எல்லாம் போட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்கள். அதோடு அந்த உடையில் என்னுடைய மகள் இடுப்பு தெரிகிறது என்று சிலர் கலாய்த்து இருக்கிறார்கள்.
31 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
3 hours ago