2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இடையூறாக இருக்காதீர்கள்

J.A. George   / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா பயம் இல்லாமல் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வோரை நடிகை ஸ்ருதிஹாசன் கடுமையாக சாடி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஊரடங்குக்கு பிறகு எல்லோருக்கும் சுத்தமாக கொரோனா பயம் போய் விட்டது. யாருமே கொரோனாவை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

இப்போது ஊரடங்கில் இருந்து வெளியே வந்து இருக்கிறோம். இந்த நேரத்தில் மறுபடியும் இன்னொரு ஊரடங்கை சந்திக்க யாரும் தயாராக இல்லை. எனவே எல்லோரும் கவனமாக இருங்கள்.

கொரோனா என்பது சாதாரணமான சளியோ இருமலோ காய்ச்சலோ வந்து போகிற மாதிரி கிடையாது. அது எவ்வளவு தீவிரமான நோய் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து பாதுகாப்பான முன் எச்சரிக்கையோடு வெளியே வாருங்கள்.

ஒரு வேளை கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் அதை மறைக்காமல் எல்லோருக்கும் சொல்லுங்கள். இதனால் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். யாருக்கும் இடையூறாக இருக்காதீர்கள். எல்லோருடைய ஒத்துழைப்பின் மூலம்தான் கொரோனாவை வெல்ல முடியும்” என்று கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X