2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இணைந்து பறந்த முன்னாள் நாயகிகள்

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என ஒரு நடிகையர் பட்டாளமே நடிக்கிறது. 

அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது மீண்டும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தனி விமானத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் கிளம்பி சென்றனர்

இந்தநிலையில் குஷ்பு மற்றும் மீனா இருவரும் ஒன்றாக இணைந்து அண்ணாத்த படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றுள்ளனர். விமான நிலையத்தின் வெளியே ஒன்றாக இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டுள்ள குஷ்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

வீரா படத்திற்குப்பின் மீனாவும், பாண்டியன் திரைப்படத்துக்குபின் குஷ்புவும் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X