Editorial / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகருமான கமல் ஹாசன், அரசியல் கட்சி தொடங்கி அதற்காக பட்டி தொட்டி எங்கும் நேரடியாக களமிறங்கி அதை பிரபலப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தமிழக டெல்டா பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் நீதி மையத்தின் சார்பாக சென்று 20 மில்லியன் ரூபாய் நிவாரண உதவி செய்தார்.

மற்றைய நடிகர்கள் போல நன்கொடை கொடுத்ததோடு நிற்காமல், நேரடியாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தையும் கூறி வந்தமையையும் காணமுடிந்தது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 பட வேலைகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து தற்போது கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்பதால், இந்தியன் 2 படமே என் நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப்பதிவு அரவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago