Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித் - சிவாவின் கூட்டணியில் வெளியான வீரம், வேதாளம் மற்றும் விவேகம் போன்ற படங்களையடுத்து, நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்திற்காக முதன் முதலாக இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பில்ம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் பொங்கல் வெளியீடாக இப்படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், அதில் அஜித் தனது வழக்கமான ஹேர்ஸ்டைலான வெள்ளைமுடி, வெள்ளைதாடியுடன் ஒரு தோற்றத்தோடும் கறுப்பு தாடியோடு இளமையான இன்னொரு தோற்றத்திலும் காணப்படுகினறார். இதையடுத்து அஜித் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் அருண் பாரதி தனது டிவிட்டரில் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு, அதன் கீழ் 'எத்தன உயரம் இமயமல அதில் இன்னொரு சிகரம் எங்க தல' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள் அஜித்தின் அறிமுகப் பாடலின் ஆரம்ப வரிகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Nov 2025