Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 18 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகுபலிக்கு நிகரான மற்றொரு திரைப்படத்தில் தான் நடிப்பதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
‘கல்நாயக், கிரிமினல்’ உள்ளிட்ட சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன், அங்கு அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “பொலிவுட்டிலிருந்து நான் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. நான் நடித்த சில ஹிந்தித் திரைப்படங்கள் நன்றாக ஓடவில்லை. எனக்கு வந்த ஹிந்திப் பட வாய்ப்புகளிலும் நான் ஆர்வம் செலுத்தவில்லை. மேலும் தென்னிந்தியப் திரைப்படங்களில் நான் தீவிரமாக நடித்து வந்தேன்.
அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு தமிழ் - ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கவேண்டியது. ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் அந்தத் திரைப்படம் ஆரம்பிக்கப்படவில்லை.
தற்போது விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேவுடன் இணைந்து ஒரு தெலுங்கு - ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறேன். 50 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
கரண் ஜோஹர் இணைத் தயாரிப்பாளர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இது இன்னொரு பாகுபலியாக நிச்சயம் இருக்கும். பொது முடக்கம் முடிந்த பிறகு மிகுதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்” என்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago