A.K.M. Ramzy / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொவிட்-19 பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப் பட்டு விட்டன. ஊரடங்கு என்று கைகள் கட்டப்பட்டு விட்டன. என் தர்மசங்கடமான நிலைமையை ராகவா லாரன்சிடம் எடுத்து சொன்னேன். அவர்
மனமுவந்து எங்கள் சங்க அறக்கட்டளைக்கு ரூ.15 இலட்சம் வழங்கி இருக்கிறார். அவருக்கு எங்கள் சங்கம் சார்பில் நன்றி. அறிக்கையில் தொடர்ந்தும் கூறியிருப்பதாவது:-
எங்கள் சங்க உறுப்பினர்களில் சிலர் திரைப்பட விநியோக தொழில் செய்து நஷ்டம் அடைந்து நலிந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு தொகை
கிடைக்கும் வகையில், ஒரு திட்டம் தீட்டி வைத்து இருந்தோம். இதற்காக நான், ‘இன்னிசை காதலன்’ என்ற புதிய படத்தை தொடங்க இருந்தேன்.இதன்பலனாக
அறக்கட்டளைக்கு ரூ.15 இலட்சம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார்
10 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
20 minute ago