Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா முதலில் சித்தார்த்தை காதலிப்பதாகவும் ஆனால் சில காரணங்களால் இரண்டு பேரும் காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
பின்னர், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யாவுடன் நடித்த போது அவரை காதலித்தார். அதனையடுத்து இரண்டு வீட்டார் சம்மதத்துடன் அவர்களது திருமணம் கோவாவில் நடைபெற்றது. ஆனால் இரண்டு பேரும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
அதற்கு காரணம் சமந்தா திருமணத்துக்கு பிறகும் நடித்தது தான் என்று பரவலாக பேசப்பட்டது. பின்னர், புஷ்பா படத்தில் ''ஊ சொல்றியா மாமா '' பாடலில் போட்ட ஆட்டத்தை தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
ஆனால் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை எடுத்து சில காலம் கழித்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினாலும், இப்போது தற்காலிகமாக ஓய்வு எடுத்திருக்கிறார்.
இதற்கிடையே குஷி படத்தில் நடித்த போது விஜய்தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் இந்த கிசுகிசு குறித்து சமந்தாவும் விஜய்தேவரகொண்டாவும் அமைதியே காத்து வருகின்றனர்.
அதே சமயம் சமந்தா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அக்கறையோடு கூறி வந்தனர். இந் நிலையில் அந்த விவகாரம் குறித்து சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் “நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்களா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, "அது தவறான முடிவு. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவீதம் 50 சதவீதம்; இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவகாரத்து 67 சதவீதம்; மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து 73 சதவீதம்" என குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago