2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இறுதிக்கட்டத்தில் ஈஸ்வரன்

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சிம்பு, வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கிய போதும், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.

மாநாடு திரைப்படத்துக்கு முன்னதாக, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்தார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் வேலைகள் அனைத்தையும் சிம்பு விறுவிறுவென முடித்து கொடுத்த நிலையில், பொங்கல் 2021க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக தற்போது சிம்பு தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X