Freelancer / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தமிழ், சிங்கள சினிமா நடிகையான நிரஞ்சனி சண்முகராஜாவுக்கு “விஸ்வாபிமாணி கலாகீர்த்தி” பட்டம் அளிக்கப்பட்டு அதியுயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், கடந்த வருடம் இலங்கையில் வெளியிடப்பட்ட சுனாமி திரைப்படத்துக்காக சர்வதேச விருதுவென்ற இலங்கை நடிகையாவார்.
இலங்கை அரசினால் அண்மைக் காலத்தில் தமிழ் திரைக் கலைஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவம், ஒட்டுமொத்த தமிழ் கலைஞர்களுக்குமான அங்கீகாரத்தின் முன்னோடியாக பார்க்கப்படுவதாக தெரிவித்து துறைசார்ந்தவர்கள் வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர்.
இலங்கை மலையகத்தில் பிறந்த நிரஞ்சனி சண்முகராஜா, இலங்கை திரைப்பட உலகில் முன்னணி கலைஞராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்திய வம்சாவளியான நிரஞ்சனி, 1989-ல் பிறந்தவர். சிறு வயது முதல் கலைத்துறை மீது ஆர்வம் அதிகம். தமிழ், சிங்களம், ஆங்கிலம் இனிமையாகப் பேசத் தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026