Freelancer / 2025 நவம்பர் 05 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான சரத்குமார், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதன்கிழமை ( 05) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்
நடிகர் சரத்குமார் புதன்கிழமை (05) காலை 11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான அவியானா சிலோன் ரிசோர்ட் – பிரைவேட் செலட்ஸ் மற்றும் அஸ்கரம்ஸ் வினது (Aviyana Ceylon Resort – Private Chalets & Ashrams) தலைவர் கலாநிதி திசர ஹேவாவசமின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் சரத்குமார் வருகைதந்துள்ளார்.
நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் நடிகர் சரத்குமார், நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளார்.
நாட்டின் முதல் 7 நட்சத்திர ஹோட்டல் என அறியப்படும், கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவியானா சிலோன் ரிசார்ட்டுக்கு அவர் நவம்பர் 06 ஆம் திகதியன்று விஜயம் செய்ய உள்ளார்.
இதைத் தவிர்த்து, அவர் கொழும்பு, காலி போன்ற முக்கியப் பிரதேசங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
'அரசு', பேரசு ' போன்ற பல வெற்றிப் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த சரத்குமார், தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இலங்கை இரசிகர்கள் மத்தியிலும் பெரும் புகழைக் கொண்ட ஒரு கலைஞராவார். அவரது இந்த விஜயம், இலங்கைச் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




4 minute ago
8 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
16 minute ago
21 minute ago