Freelancer / 2022 செப்டெம்பர் 17 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசைஞானி இளையராஜா தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.
பிரபல பாடகர்கள் மனோ, ஸ்வேதா மேனன், எஸ்பிபி சரண் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்னில் இன்றும், நாளையும் இளையராஜா தலைமையிலான குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மாஸ்ட்ரோ கலாநிதி இளையராஜாவையும் அவரின் குழுவினரையும் வரவேற்பதில் கௌரவமடைவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. (a)



1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026