Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 10 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரை நிர்வாணப் போராட்டம், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள் மீது பாலியல் புகார் என சர்ச்சைகளுக்குப் பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கிளைமாக்ஸ் என்ற அந்தப் படத்திலும் சர்ச்சை நடிகையாகவே ஸ்ரீரெட்டி நடிக்கிறார் . படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் ஏதாவது சர்ச்சைப் பதிவுகளை வெளியிட்டு எப்போதும் தன்னை ஊடக வெளிச்சத்தில் வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்று நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதில், தனது உள்ளாடைகள் பற்றி குறிப்பிட்டு அதனை நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவிக்கு நான் பரிசளிக்க வேண்டும் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
ஏற்கெனவே நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார்களைத் தாக்கி இப்படி பதிவிட்டுள்ளது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
51 minute ago